கலாட்டா

கலாட்டா

Saturday, June 15, 2013


Welcome to Facebook - Log In, Sign Up or Learn More
Heading out? Stay connected
Visit facebook.com on your mobile phone.
Get Facebook Mobile
Sign Up
It's free and always will be.
I am:
Birthday:

By clicking Sign Up, you agree to our Terms and that you have read our Data Use Policy, including our Cookie Use.

An error occurred. Please try again.
Create a Page for a celebrity, band or business.

Wednesday, January 2, 2013

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் துயரங்கள் வந்த பாதையில் நின்றிட, துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு சென்றிட இன்பம் நிறைந்த இனிய வருடமாய் இப் புதிய வருடம் அனைவருக்கும் இனிதாய் மலர இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லாம் பெற்று இல்லாமை நீங்கிவாழ இறைவா இப்புத்தாண்டில் அருள் புரிவாய்.



பொங்கி வரும் புது வெள்ளமாய் பழையன கழிதலும் புதியன புகுதலும் – சொல்லில், செயலில், மனதில்  புத்தாண்டாய்  2013 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் ...

Wednesday, March 2, 2011

விரிவான பக்கம் கிருமி பரப்பும் ATM மெசின்கள்

ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று . பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.


கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது, வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத் தொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. இதே பட்டியலில் பஸ் தரிப்பிடங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது .

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக உடல் உறுப்புக்களை விற்கும் பெற்றோர்!

அமெரிக்காவில், தங்கள் குழந்தைகளின் கல்வி கடன் 90 லட்சத்தை அடைப்பவர்களுக்கு உடல் உறுப்பை அளிக்க ஒரு பெற்றோர் முன்வந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஒரு பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் 90 லட்சம் உள்ளதாகவும், இதை அடைப்பவர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை அளிப்பதாக "வெப்சைட்'டில் அறிவித்துள்ளனர்.


கடனை அடைப்பவர்கள் எங்கள் ரத்தம், பிளாஸ்மா மற்றும் அனைத்து உறுப்புகளையும் எடுத்துக் கொள்ளலாம். "உயிருடன் கூடிய சடலம் வேண்டுமா?' என்ற அறிவிப்புடன் இவர்கள் இந்த விளம்பரத்தை இணையதளத்தில் கொடுத்துள்ளனர்

Friday, January 21, 2011

உங்களை உணருங்கள் அன்பில் மலருங்கள்

ரென்சன் ! ரென்சன் !
வீட்டிலும் ரென்சன்
வெளியிலும் ரென்சன்
நாட்டிலும் ரென்சன்
நம்முள்ளும் ரென்சன்
மாற்றம் வருமா?
மனது ஏங்கியது
காத்திருந்த எமக்கு
கடவுள் வரம் தந்தது போல்
வாழும் கலைப் பயிற்சி
வழி சமைத்து தற்ததுவே!
 


உலகில் முதல் முறையாக மட்டக்களப்பு வெபர் அரங்கிலே 22.01.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 21,000 மக்கள்
ஒன்றினைந்து மாபெரும் 'தேவாரப் பாராயணம் ' பரம பூஜ்ய சிறி சிறி ரவிசங்கர் குருஜீ நிகழ்த்தும் 'மகா ருத்ர பூஜை '
அனைவரும் வருக!! ஆனந்தம் பெறுக!!
 

நன்றியுடன் அழைக்கும் வாழும் கலைக் குடும்பம்.

Thursday, November 11, 2010

Beauty of Mathematics !!!!!!!

  •  Maths Magic
1) 'Maths Magic:
    Multiply 259 x (ur age) x 39.
   ?
   ?
   ?
   ?
   ?

   U wil get an intresting answer
    Try it really.
      it is very intresting'

2)  Multiply 259 x (ur age) x 39.
     ?
     ?
     ?
     ?
      U wil get an intresting answer
       Try it really.
         it is very intresting'
3)   '9 x 9 + 7 = 88
     98 x 9 + 6 = 888
     987 x 9 + 5 = 8888
     9876 x 9 + 4 = 88888
     98765 x 9 + 3 = 888888
     987654 x 9 + 2 = 8888888
     9876543 x 9 + 1 = 88888888
     98765432 x 9 + 0 = 888888888'
4)   '1 x 8 + 1 = 9
     12 x 8 + 2 = 98
     123 x 8 + 3 = 987
     1234 x 8 + 4 = 9876
     12345 x 8 + 5 = 98765
     123456 x 8 + 6 = 987654
     1234567 x 8 + 7 = 9876543
     12345678 x 8 + 8 = 98765432
     123456789 x 8 + 9 = 987654321'



5)   '1 x 9 + 2 = 11
     12 x 9 + 3 = 111
     123 x 9 + 4 = 1111
     1234 x 9 + 5 = 11111
     12345 x 9 + 6 = 111111
     123456 x 9 + 7 = 1111111
     1234567 x 9 + 8 = 11111111
     12345678 x 9 + 9 = 111111111
    123456789 x 9 +10= 1111111111'

6)  ur cell nmbr’s
     last digit x 2
    + 5
    x 50
    + ur age
    + 365
    &
   - 615.
   the last
   2 no. is
   ur age &
   1st no. is
   ur cell’s last no
   just try it!

7)  1 x 1 = 1
    11 x 11 = 121
    111 x 111 = 12321
    1111 x 1111 = 1234321
    11111 x 11111 = 123454321
    111111 x 111111 = 12345654321
    1111111 x 1111111 = 1234567654321
    11111111 x 11111111 = 123456787654321
    111111111 x 111111111 = 12345678987654321'
8)   take the date  you born x
     4 + 13 x 25 – 200 +
     Mounth  you born  x
     2 – 40 x 50 +
     Last 2 digit of the  year you born - 10500
      Now  answer your date of birth
      Notice something ! it is interesting!
      (its not a joke) Try it.

Saturday, October 23, 2010

மரண அறிவித்தல்


தேத்தாத்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
கிருஷ்ணபிள்ளை அற்புதநாதன்
அவர்கள் 23.10.2010 சனிக்கிழமை காலமானார்.

Saturday, October 9, 2010

எங்கள் ஆசிரியர்..!

அகர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே...
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...
ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

இனிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே...
இனிய கதை சொல்லித்தந்த  எங்கள் ஆசிரியையே...
ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!

ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...
ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...
ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!

உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
உலகம் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையே..!

Tuesday, July 20, 2010

சில பொது அறிவுக் குறிப்புக்கள்

1.அரசர்க்குரியவை பத்து
1.படை    2.குடை    3.கொடி    4.முரசு    5.புரவி   
6.களிறு    7.தேர்        8.தார்         9.மாலை    10.செங்கோல்
2.இராசி பன்னிரண்டு
1.மேடம்    2.இடபம்    3.மிதுனம்    4.கடகம்    5.சிங்கம்
6.கன்னி    7.துலாம்    8.விருச்சிகம்    9.தனுசு 10.மகரம்
11.கும்பம்    12.மீனம்
3.எட்டுத்தொகை நூல்கள்
1.நற்றிணை        2.ஐங்குறு நூறு    3.பரிபாடல்      4.குறுந்தொகை
5.பதிற்றுப்பத்து    6.கலித்தொகை    7.அகநானூறு 5.புறநானூறு.
4.ஐம்பெருங்குரவர்
1.அரசன்    2.குரு        3.தந்தை    4.தேசிகன்    5.மூத்தோன்
5.ஐம்பெருங்குழு
1.அரசர்    2.அமைச்சர்     3.புரோகிதர் 4.ஒற்றர்  5.தூதுவர்
6.ஐம்பெருங் காப்பியங்கள்
1.சீவகசிந்தாமணி        2.சிலப்பதிகாரம்    3.மணிமேகலை
4.குண்டலகேசி        5.வளையாபதி
7.ஐவகைத் தந்தையர்
1.பிறப்பித்தோன்    2.கற்பித்தோன்    3.மணமுடித்தோன்
4.அன்னம் தந்தோன்    5.ஆபத்துக்குதவினோன்
8.ஐவகைத் தாயார்
1.பாராட்டுத் தாய்        2.ஊட்டுத் தாய்    3.முலைத் தாய்
4.கைத் தாய்    5.செவிலித் தாய்
9.காற்றின் குணம் ஐந்து
1.போக்கு    2.வரவு    3.நோய்    4.கும்பித்தல்    5.பரிசம்
10.கொடை வகை மூன்று
1.வரையின்றி யாவர்க்கும் கொடுத்தல்
2.புகழ்வோர்க்குக் கொடுத்தல்
3.இரப்போர்க்குக் கொடுத்தல்
11.பதினாறு வகைப் பேறுகள்
1.புகழ்    2.கல்வி    3.வலி    4.வெற்றி    5.நன்மக்கள்
6.பொன்    7.நெல்    8.நல்லூழ்    9.நுகர்ச்சி    10.அறிவு
11.அழகு    12.பொறுமை    13.இளமை    14.துணிவு
15.நோயின்மை    16.வாழ்நாள்
12.பருவ மங்கையர் எழுவர்
1.பேதை(5-7)    2.பெதும்பை(8-11)        3.மங்கை(12-13)
4.மடந்தை(14-19)    5.அரிவை(20-25)        6.தெரிவை(26-31)
7.பேரிளம் பெண்(32-40)

Wednesday, June 23, 2010

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...

நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு

உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...

பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்.

நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும்.

இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும்.

எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் .

தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் .

Saturday, June 12, 2010

Tuesday, May 18, 2010

விவேகானந்தரின் விவேக மொழிகள்


  • மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.

  •  மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.

  • யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

  • துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.

  • ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.

  • அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.

  • எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.

  • மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

  • நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

  • ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.

  • எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.

  • மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

  • பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.

  • கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை!

நேற்று என்பது
முடிந்துவிட்டது!
நாளை என்பது
இனிவரும் நாள்!
இன்று என்பது
உன் கையில்!

நடந்ததை மறந்துவிடு
நடப்பதை நினைத்திரு
வெற்றி அடையும் வரை
விழித்திரு உனக்கான
விடியலை நோக்கி...

உழைத்திரு...முயற்சித்திரு
உன் வெற்றியை அடைய
எதை தேடுகின்றாய்
புறத்தே தேடினால்
அது கிடைக்காது
அகத்தே ஒளிந்திருக்கும்
உன் சக்தியை
விடாது பற்றிக்கொள்

உனக்கான
வெற்றிக்கனியைப் பறிக்க
என்னால் முடியாது
எதுவும் முடியாது
என்பது "அவநம்பிக்கை"...

உன் கனவுகளை
நிஜமாக்கி உன்னை
வெற்றிமேல் வெற்றி
பெறச்செய்வது
என்பது உன் தன்னம்பிக்கை

வெயில் உள்ளவரை
மட்டுமே உன்
நிழல்கூட உன்னை
தொடர்ந்து வரும்
ஆனால்
உன்னை விடாமல்
பற்றிக் கொண்டு
தூக்கி நிறுத்திட
உன்னால் முடியும்
என்று சிந்திக்க வைக்கும்
அந்த முன்றாவது கைதான்
உன் "தன்னம்பிக்கை"

விடாமல் பற்றிக்கொள்
விழாமல் எழுந்துநிற்பாய்
உன் வாழ்க்கையில்...

நெப்போலியனின் காதலும் வீரமும்.

காதல், நாணம், துணிச்சல், வீரம், ஆசை, ஆளுமை,ஈகை, நகைச்சுவை திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மனிதகுலத்தின் பிரத்யேக குணங்களாக விளங்கின. மனித நாகரீகத்தில் காதல், வீரம் ஆகிய இரண்டு உணர்வு வெளிப்பாடுகள் மிகுந்து காணப்படும் மனிதன் தளபதியாக, தலைவனாக, அரசனாக கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும். நெப்போலியனின் அசாதரணமான யுத்த குணங்களை போலவே அவனின் காதலும், அதன் தொடர்ச்சியும் முடிவும் வித்தியாசமானதாக அமைந்து விட்டது.

பிரான்ஸ் தேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தை அடக்கிவிட்டு மாளிகையில் அமர்ந்திருக்கின்றான் நெப்போலியன். அப்பொழுது ஒரு சிறுவன் அவனை வணங்கிவிட்டு சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அவனுடைய அப்பா இறந்து விட்டதாகவும் அப்பொழுது அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாள் படையினரால் கைப்பற்றப் பட்டதாகவும், அந்த வாள் வழிவழியாக வந்த தன் குடும்பச் சொத்து என்பதால் தாங்கள் அதை பையனின் பணிவும், குடும்ப பாரம்பரியத்தின் மீது கொண்ட அவனுடைய பற்றுதலும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்துகின்றது. பாரட்டத்தக்க நற்பண்புகள் கொண்ட இப்பையனை வளர்த்த தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட அவன் வீட்டிற்கு செல்கின்றான் நெப்போலியன், அவன் நினைத்துக் கொண்டு சென்றதோ நரை முடியும் சுருங்கிய கன்னங்களும் கொண்ட நடுத்தர வயது பெண்ணை. ஆனால் கண்டதோ கட்டுக்குலையாத மேனியும், சொக்கி விழ வைக்கும் அழகும் கொண்ட சொக்கத்தங்கம் போன்ற சொர்ணமயிலை. போர் களங்களில் வெற்றிகளை குவித்த நெப்போலியன் காதல் களத்தில் முதன்முறையாக தோற்றுப் போகின்றான்... பார்த்தவுடன் பற்றிக் கொள்ள நினைத்த அந்த இளம் விதவையின் பெயர் ஜோஸபைன். தன்னை விட இரண்டு வயது மூத்தவளும் இரண்டு ஆண் மக்களுக்குத் தாயுமான ஜோஸபைனிடம் தன் காதலை தெரிவிக்கின்றான். மறுக்கின்றாள் அவள். விடாமல் தொடர்கின்றான். மண்டியிடுகின்றான். அவள் முன் கெஞ்சுகின்றான். பிதற்றுகின்றான். இரண்டு குழந்தைகளையும், விதவைக் கோலத்தையும், சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்களையும், நெப்போலியனின் எதிர்கால யுத்த நடவடிக்கைகயையும் சுட்டிக் காட்டி மறுக்கின்றாள் ஜோஸப்பின். இறுதியில் எப்பொழுதும் போல் வென்றான் நெப்போலியன். திருமணம் இனிதே நடைபெறுகின்றது. இன்பமாய் வாழ்வைத் தொடங்கினர் நெப்போலியன்-ஜோஸப்பின் தமபதியினர்.

யுத்தக் களத்தில் நினைத்த மாத்திரத்தில் தூங்கவும், நினைத்த மாத்திரத்தில் திரும்பி எழவும் தெரிந்த நெப்போலியன் திருமணம் முடிக்கும்போது சாதாரண படைத்தளபதி, விரைந்து செயலாற்றும் திறனும், துணிச்சலும், வெறித்தனம் மிக்க வேகமும் கொண்ட நெப்போலியன் இத்தாலி, ஆஸ்ட்ரியா, சார்டினாயா ஆகிய நாடுகளின் வெற்றிக்குப் பின் பிரான்ஸ் தேசத்தின் படைத் தவைனாகின்றான். தேன் குடத்தைச் சுமந்து வரும் வண்டிணை போல் காதல் மனைவியின் சுகத்தை துளித்துளியாய் அனுபவித்த நெப்போலியனால் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையும், காட்டாறுகளும், கற்பாறைகளும் காட்டு விலங்குகளும் பாலைவனங்களும் அவனுக்கு பூந்தோட்டமாய்க் காட்சியளித்தன. நினைத்த மாத்திரத்தில் நாடுகளை வெல்வதும். கைப்பற்றிய நாட்டிலிருந்து கொண்டு வந்த செல்வங்களைக் குவிப்பதும் என தொடர்நது நெப்போலியன் பிரான்ஸ் தேசத்தின் மக்களால் பெருமிதத்தோடு பார்க்கப் பட்டான். உலக அரங்கில் பிரான்ஸ் தேசத்தின் மதிப்பு மிக வேகமாய் உயர்ந்தது. புதினாறாம் லூயி மன்னனின் முடியாட்சியை முறியடித்து குடியாட்சியை பதினேழாம் நூற்றாண்டிலேயே மலரவிட்ட பிரான்ஸ் தேசம் மெல்ல மெல்ல நெப்போலியனின் வீரத்தால் வசீகரிக்கப்பட்டு அவனைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டது ஜோஸபின் பேரரசியாக முடிசூட்டப்பட்டான்.

பின்விதி மெல்ல விளையாடியது. உலகின் கால்பகுதி நிலங்களை தன் ஆளுகையில் வைத்திருந்த இங்கிலாந்த௉யும் மிகப்பெரிய நாடான ரஸ்யாவையும் கைப்பற்றினால் இந்த பூமிப்பந்து முழுக்க தன் கையில் வந்து விடும் என கணக்குப் போட்டான் நெப்போலியன் ரஸ்யாவின் போர் தந்திர முறைகளாலோம், அனுபவத்தறியாத கடுங்குளிராலும் தோற்றுப் போனான். இப்போரில் சுமார் ஒன்றறை லட்சம் பேர் குளிரில் விறைத்து இறந்து போனார்கள் மக்கள் மெல்ல வெறுக்க ஆரம்பித்தனர். தனக்குச் சொந்த மகன் பிறந்தால் மண்ணாட்சியை தக்க வைத்துக் கொளளலாம் என்ற தவறான ஆலோசனையால் மனம் மாறிய நெப்போலியன் ஊனுருக. நெஞ்சுருக,நெத்குருக காதலித்த அன்பு மனையாளை மாளிகையை விட்டு அனுப்பிவிட்டு ஆஸ்டிரிய நாட்டு அரச வம்சத்தைச் சேர்ந்த மேரிலூயி என்னும் பெண்ணை மணக்கினறான்.

ஒரு வருடத்தில் மகன் பிறக்கின்றான். சூழ்நிலை மாறி காற்று மாதிரி வீசுகின்றது பாரம்பர்யமாய் அரசியல் தந்திரமும் போர் திறனும் மிக்க இங்கிலாந்து நேசநாடு கிளன் கூட்டணியை ஏற்படுத்தி பிரான்ஸில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்குகின்றது. நெப்போலியன் செயிண்டு எலினா தீவில் சிறைப் பிடிக்கப் படுகின்றான் வெற்றி பெற்ற நாடுகளின் உப்பரிகைகளில் உலவிய நெப்போலியன் தனிமையில் தவிக்கின்றான். இரண்டாவது மனைவி மேரி லூயி நாட்டை விட்டு ஓடிவிடுகின்றாள். விரட்டி விடப்பட்ட காதல் மனைவி மட்டும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நெப்போலியன்-எலினா- நெப்போலியன் என்று புலம்பியபடியே லோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள்.

ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்தனர் நெப்போலியனும், ஜோஸப்பினும். நெப்போலியன் காதலிலும் வீரத்திலும் தோற்றுப் போனான். ஜோஸப்பின் வாழ்க்கையில் தோற்று காதலில் வென்றாள்.

காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். சமூக அமைப்புகளையும், இயற்கை நியதிகளையும் மீறிய முரட்டுத்தனமான ஆளுமைகளுடன் கூடிய வீரமும் தோற்றுப் போகும். காதலும் தோற்றுப் போகும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls